சுடச்சுட

    

    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரிஇடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சத்திரம் வட்டார உதவித்  தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். துணைச் செயலர் இரா.தேசிகன் வரவேற்றார். வட்டாரச் செயலர் கொ.கதிரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ம.கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 1-6-2006-ல் பணிவரன் முறைப்படுத்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொடக்கக் கல்வித்துறை அலுவலகங்களில் பெருகி வரும் லஞ்சம், ஊழலைத் தடுத்து நிறுத்த வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருமான வரித்தொகையை இ-டிடிஎஸ் முறையில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai