சுடச்சுட

    

    முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

    நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கையுந்துபந்து, கபடி,  கால்பந்து, ஹாக்கி ஆகிய 4 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 760-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாவது பரிசாக ரூ.750, மூன்றாவது பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்படவுள்ளன.

     மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.த.பெரியகருப்பன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்

    கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai