சுடச்சுட

  

  வங்கிக் காவலரின் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு

  By தருமபுரி  |   Published on : 10th January 2015 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் தனியார் வங்கிக் காவலரின் துப்பாக்கிக் குண்டு திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  தருமபுரி-சேலம் சாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சண்முகம்(48) பாதுகாவலராகப் பணிபுரிகிறார்.

  இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல வங்கி பாதுகாப்புப் பணிக்கு வந்த இவர், தனது துப்பாக்கியை மேல்கூரையைப் பார்த்தப்படி வைத்து துடைத்துக் கொண்டிருந்தராம்.

  அப்போது, திடீரென துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி வெடித்தது. இந்த குண்டு வங்கியின் மேற்கூரையில் பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

  இந்த சம்பவம் குறித்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், தருமபுரி நகர போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai