Enable Javscript for better performance
வீசானத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வீசாணம் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 53 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    நாமக்கல் அருகே வீசாணம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று வருவாய்த்துறை அலுவலர்களிடம் வழங்கினார். அப்போது இம்மனுக்கள் மீது உடனடித் தீர்வுகள் காணப்பட்டு தகுதியான நபர்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருத்தம்,  உதவித் தொகைகள், குடிநீர் வசதி, இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்புத் திட்ட அடையாள அட்டை, அடிப்படை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 53 மனுக்கள் பெறப்பட்டன.

    நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த 13 நபர்களுக்கு உடனடியாக அத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

    வருவாய்க் கோட்டாட்சியர் கே.காளிமுத்து,  வட்டாட்சியர் கதிரேசன் மற்றும் அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai