சுடச்சுட

  

  உலக வரலாற்றை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

  ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டியில் காந்திய மக்கள் இயக்கத்தின் 2 நாள் பயிற்சிக் கருத்தரங்கு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரித் தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்தார்.

  கருத்தரங்கைத் தொடக்கி வைத்து தமிழருவி மணியன் பேசியது: பணம், பதவி, அதிகாரம், புகழ் நான்கும் நான்கு வித போதைகள், இதற்கு அடிமையாகாதவர்களைக் காண்பது அரிது. ஒவ்வொருவரும் நல்ல நற்பண்புகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

  பொன், பொருள், அதிகாரம் தேடி ஓடினால் அமைதி வராது. நமக்குத் தேவையான அமைதி அகத்தில் உள்ளது. அமைதி முதல் ஆண்டவன் வரை வெளியில் தேடுகிறோம். புற இன்பம் வந்து போகும். அக இன்பத்தை நமக்குள் தேடுவதால் கிடைப்பதுதான் நிலைத்து நிற்கும். அறியாமை அகற்றி, அறிவுத் தேடல் வேண்டும். ஒவ்வொருவரும் உலக வரலாற்றைப் புரட்டிப் புரட்டிப் படிக்க வேண்டும். அது போன்ற சிந்தனையுள்ளவர்களால்தான், சமூக சீரழிவுகளை மாற்றம் செய்ய இயலும் என்றார்.

  தமிழகத்தில் மது விற்பனை என்ற தலைப்பில் முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும், பொருளாதாரப் பேராசிரியருமான இராம.சீனிவாசன், கருத்தரங்கில் ஊடகங்களின் போக்கு என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் பேசினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai