சுடச்சுட

  

  குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  எடப்பாடி சாலை தேவூர் அண்ணமார் கோயில் அருகே தொடங்கிய பந்தயத்தை தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்.வள்ளியம்மாள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

  கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் வரவேற்றார்.

  கல்லூரித் தலைவர் எஸ்.யுவராஜா, தாளாளர் எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இந்த மாரத்தான் ஓட்டம் குமாரபாளையம் சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை வழியாக சுமார் 7 கி.மீ. தொலைவுக்குச் சென்று கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.

  கல்லூரி ஆண்டு விழா, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புகையில்லாப் பொங்கல், அமைதியை வலியுறுத்தி இப்போட்டி நடைபெற்றது. முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai