சுடச்சுட

    

    சாக்கடைக் கழிவு நீரை வெளியேற்ற பாஜக வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 11th January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அம்மன் குளத்தில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

    திருச்செங்கோடு நகர பாஜக சிறப்பு செயற்குழுக் கூட்டம் நாடார் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. நகரத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மூர்த்தி வரவேற்றார். துணைத் தலைவர்கள் கணேசன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்செங்கோடு அம்மன் குளம் மற்றும் தெப்பக் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சாக்கடைக் கழிவு நீரை வெளியேற்றி விட்டு மழைக் காலங்களில் அர்த்தனாரீஸ்வரர் மலையில் இருந்து வரும் மழை நீரை 2 குளங்களிலும் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் விட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்ட அமைப்புச் செயலர் சந்திரசேகர், செயலர் காந்திச்செல்வன், நகரப் பொருளர் சங்கர் முத்துசாமி, பொதுச் செயலர் ராதாகிருஷ்ணன், செயலர் சந்திரமோகன், மகளிரணித் தலைவி பழனியம்மாள், தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai