Enable Javscript for better performance
சிறுமொளசியில் மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே சிறுமொளசி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடந்தது.

    திருச்செங்கோடு ஒன்றியக்குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன் முகாமுக்குத் தலைமை வகித்தார். சிறுமொளசி ஊராட்சி மன்றத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இருதய நோய்கள், இ.சி.ஜி. பரிசோதனை, ரத்த அழுத்தம், மகளிர் மருத்துவம், சர்க்கரை நோய், சிறுநீர், ரத்தப் பரிசோதனைகள், மூட்டுவலி, வாத நோய்கள், கண் பரிசோதனை, பல் மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை மற்றும் சித்த வைத்தியம், சிறப்பு உடல்நலப் பரிசோதனையும் அளிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 650 பேர் பங்கேற்றனர்.

    முகாமில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மருத்துவர்கள் கோகுல்ராம், அருள்குகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குப்புசாமி, சிறுமொளசி கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai