Enable Javscript for better performance
தொடக்கப் பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட பொம்மம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு ற்றும் விளையாட்டு விழா அண்மையில் நடந்தது.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் முகில்மதி வரவேற்றார். உதவி ஆசிரியை சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கெளரி, ஊராட்சித் தலைவர் ரங்கசாமி, புதுச்சத்திரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாஜலம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரங்கசாமி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் நடராஜன், ஆசிரியர்கள் நடேசன், இளங்கோ, பெரியம்மா, துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இளங்கோ அறக்கட்டளை சார்பில் பாபு இளங்கோ பரிசுப் பொருள்களையும், கல்வி உதவித் தொகையையும் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் தமிழரசி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். உதவி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ஜன.19-ல் நாமக்கல்லில் அஞ்சல்துறை  வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

    அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாமக்கல் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வி.முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின் தங்களது புகாரினை வி.முத்துராஜ், அஞ்சலக கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம் என்ற முகவரிக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பலாம். புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்மந்தமாக என்ற எழுத வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கலந்துகொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார்க் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும்.

    நாளை மல்லசமுத்திரத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி

    மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில் வரும் 12, 13-ஆம் தேதிகளில் கிராம அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குள்பட்ட மங்களம் பகுதியில் வரும் 12, 13-ஆம் தேதிகளில் விவசாயிகளுக்கான கிராம அடிப்படைப் பயிற்சி நடைபெறுகிறது.

    வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் மற்றும் விதைச்சான்று துறைகள், மண் ஆய்வுக் கூடம், பட்டு வளர்ச்சித் துறை, வனத் துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பயிற்சியில் விவசாயிகள் மற்றும் உழவர் மன்ற அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு, மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai