சுடச்சுட

    

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 7,136 பேர் எழுதினர்

    By நாமக்கல்,  |   Published on : 11th January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 7,136 பேர் எழுதினர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வுக்கு 7,445 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 7,136 எழுதினர்.

    தேர்வுக் கண்காணிப்புப் பணியில் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

    நாமக்கல் பகுதியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், நாமக்கல் மாவட்ட தேர்வுக் கண்காணிப்பாளாருமாகிய பொன்.குமார், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai