சுடச்சுட

    

    300 மீட்டர் நீளத்தில் தேசியக் கொடி:மாணவர்களின் சாதனை முயற்சி

    By நாமக்கல்,  |   Published on : 11th January 2015 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள் 850 பேர் கை அச்சு மூலம் 300 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் தேசியக் கொடியை அண்மையில் வரைந்து சாதனை படைத்தனர்.

    இந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 43 நிமிடங்களில் தேசியக் கொடியை ஓவியமாக வரைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

    மேலும், "தூய்மை இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் "தூய்மை இந்தியா' என்ற வாசகத்தை மாணவர்கள் எழுதியுள்ளனர். துணி மூலம் இந்த வாசகத்தை 50 நிமிடங்களில் எழுதி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    இதுகுறித்து பள்ளித் தாளாளர் பி.செங்கோடன், தலைவர் ஏ.எஸ்.பிரபு கூறியது:

    மாணவர்கள் கல்வியோடு பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றனர் அவர்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai