சுடச்சுட

    

    நாமக்கல்லில் சாலைப்பாதுகாப்பு வார விழா தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 12th January 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள நாமக்கல் தெற்கு, நாமக்கல் வடக்கு, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் சாலைப்பாதுகாப்பு வார விழா துவக்கநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்த கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், ஆர்.சாந்தி முன்னிலை வகித்தனர்.

    தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சி அரங்கில் சாலை விதிகளை கடைபிடிக்காதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும், முதல்வர் போக்குவரத்துதுறையில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி, வாகன விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கொடியசைத்து துவக்கிவைத்தார். அண்ணா சிலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

    துணை போக்குவரத்து ஆணையர் எஸ்.வேலுச்சாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எஸ்.உதயகுமார், கே.எஸ்.துரைசாமி, எ.கருப்பண்ணன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் இரா.கரிகாலன், ஆவின் தலைவர் சின்னுசாமி, முன்னாள் எம்பி எஸ்.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    7 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

    7 நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு வார விழாவில், ஞாயிற்றுக்கிழமை சாலைப்பாதுகாப்பு குறித்த கண்காட்சி திறப்பு விழா, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திங்கள்கிழமை(ஜன.12) சாலைப்பாதுகாப்பு குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சி, 13 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி, 18 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சிறந்த வாசகம் எழுதும் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    19ஆம் தேதி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, 20ஆம் தேதி இலவச மருத்துவ முகாம்கள், 21ஆம் தேதி சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai