சுடச்சுட

    

    16 மையங்களில் அம்மா சிமெண்ட் விற்பனை இன்று தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 12th January 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூட்டை ரூ.190 விலைக்கு 16 கிடங்குகளில் அம்மா சிமெண்ட் விற்பனை திங்கள்கிழமை(ஜன.12) தொடங்குகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோகனூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சிமெண்ட் கிடங்குகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு முதல் மற்றும் இரண்டாவது சிமெண்ட் கிடங்குகள் ஆகிய 5 இடங்கள் என மொத்தம் 16 இடங்களில் ஒரு மூட்டை ரூ.190-க்கு சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது.

    வீடு கட்டும் தனிநபர்களுக்கு 100 சதுர அடி கட்டுமானத்திற்கு 50 சிமெண்ட் மூட்டை என்ற அடிப்படையில் அதிகபட்சம் 1,500 ச.அடி கட்டுமான பணிக்கு அதிகபட்சமாக 750 மூட்டை வரை தவணை முறையிலும், வீடுகள் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு 10 மூட்டை முதல் 100 மூட்டை வரை சிமெண்ட் வழங்கப்படுகிறது.

    இதனைப் பெறுவதற்கு பயனாளிகள் வீட்டின் வரைபடச்சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரின் சான்றிதழ் மற்றும் சிமெண்ட் தேவைக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை வழங்கி விநியோக கிடங்குகளில் சிமெண்ட் மூட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai