சுடச்சுட

    

    அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க கையெழுத்து இயக்கம் தொடக்கம்

    By நாமக்கல்,  |   Published on : 13th January 2015 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்

    நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரக் கழிப்பறைகளை உறுதிப்படுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகளுக்கு என, தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    கல்வியில் தனியார்மய ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும். அதிக நிதி ஒதுக்கி அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திட வேண்டும். மாதிரிப் பள்ளித் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி, 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று தமிழக அரசிடம் வழங்கிடும் பணி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்று வருகிறது.

    இதன்படி, நாமக்கல் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். செயலர் சுரேந்தர் முன்னிலை வகித்தார். பொருளர் மணிராஜா வரவேற்றார்.

    மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகோத்தமன் கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai