சுடச்சுட

    

    புரட்சிகர தொழிலாளர் கட்சி சார்பில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

    மாவட்டச் செயலர் கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் டி.சிவக்குமார், பா.ம.க., மாநில மாணவர் அணி ஆலோசகர் நல்வினை விஸ்வராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிமெண்ட் விலை உயர்வைக் கண்டித்து வரும் பிப்.16-இல் சங்ககிரி, வாழப்பாடி, வேலூர் பகுதிகளில் உள்ள சிமென்ட் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்பது

    உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராசிபுரம் தொகுதி அமைப்பாளர் பி.முருகேசன், மாணவர் அணிச் செயலர் வி.பூபதி, இளைஞர் அணிச் செயலர் டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai