சுடச்சுட

  

  இந்தியன் வங்கியின் வர்த்தக இலக்கு ரூ.3 லட்சம் கோடி

  By நாமக்கல்,  |   Published on : 13th January 2015 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிகழாண்டில் இந்தியன் வங்கியின் வர்த்தக இலக்கு ரூ.3 லட்சம் கோடி என அதன் செயல் இயக்குநர் பி.ராஜ்குமார் தெரிவித்தார்.

  வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நாமக்கல் பொன்நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து வங்கியின் செயல் இயக்குநர் பி.ராஜ்குமார் பேசியது:

  வங்கிச் சேவையில் 109 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தியன் வங்கி நாமக்கல் மாவட்டத்தில் இப்போது 30-ஆவது கிளையைத் தொடங்கியுள்ளது. இந்தியன் வங்கி கடந்த ஆண்டு ரூ.2.86 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

  நிகழாண்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

  கல்விக் கடன் காசோலைகளை மாணவர்களுக்கு வழங்கி ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது:

  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.101 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.137 கோடி கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டில் ரூ.101 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது வரை ரூ.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கியாளர்களின் ஒத்துழைப்பு மூலம்தான் இந்தச் சாதனையை அடைய முடிந்தது என்றார்.

  நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பி.தங்கவேல், கிளை மேலாளர் ஜி.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai