சுடச்சுட

    

    ஏலத்துக்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

    By பரமத்திவேலூர்,  |   Published on : 13th January 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூரில் திங்கள்கிழமை நடந்த ஏலத்துக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்தது.

    பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் காவிரிக் கரையோரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    பரமத்திவேலூர் சந்தைக்கு இங்குள்ள சிறு விவசாயிகள் நேரடியாக தங்களது வாழைத்தார்களை ஏலத்துக்குக் கொண்டு வருகின்றனர். திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

    வரத்து அதிகரித்ததால் குறைந்த விலைக்கே வாழைத்தார்கள் ஏலம போயின.

    பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450, ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400, பச்சைலாடன் ரூ.300, கற்பூரவள்ளி ரூ.250 வீதமும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு ஏலம் போனது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வாழைத்தார் ஒன்றுக்கு சுமார் ரூ.100 முதல் ரூ.250 வரை விலை குறைவாக ஏலம் போனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai