Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்  |   Published on : 13th January 2015 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு பெற்றுத்தர வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொன்னி சர்க்கரை ஆலை கிளை சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் எ.முத்துசாமி தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்

    செ.நல்லாக்கவுண்டர் பேசியது:

    தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த ரூ.2,650 விலையைத் தர மறுத்து டன்னுக்கு ரூ.2,250 மட்டுமே விவசாயிகளுக்கு கொடுத்தனர். கடந்த ஆண்டு மட்டும் ரூ.362 கோடி விவசாயிகளுக்குத் தர வேண்டியுள்ளது.

    பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் நிலுவையில் உள்ள பணத்தைத் தரமுடியாது என்று தனியார் ஆலை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 2014-2015 பருவத்தில் அரசு டன் ஒன்றுக்கு ரூ.2,650 நிர்ணயம் செய்துள்ளது.

    இந்த விலை கட்டுபடியாகாது என விவசாயிகள் வலியுறுத்திவரும் நிலையில், டன்னுக்கு ரூ.2,200 மட்டுமே தருவோம் என்று தனியார் சர்க்கரை ஆலைகள் தன்னிச்சையாக அறிவித்து அரைவையை தொடங்கியுள்ளன.

    ஆகவே, தனியார் ஆலைகள் தரவேண்டிய பாக்கியை 15 சதவீத வட்டியுடன் அரசு பெற்றுத்தர வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வீதம் விலை அறிவிக்க வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.ஆதிநாராயணன், செயலர் பி.பெருமாள், பயனீட்டாளர் சங்கச் செயலர் என்.நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai