சுடச்சுட

  

  இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நாமக்கல் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில், இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி பயிற்சி முகாம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

  மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எம்.நீலகண்டன் தலைமை வகித்தார். பெரப்பன்சோலை ஊராட்சித் தலைவர் பி.கே.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

  நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார். பொது சுகாதாரத்தைப் பேணிக் காத்தல், கொசு, ஈ போன்றவற்றால் ஏற்படும் நோய் ஒழிப்புப் பணி போன்றவை குறித்து பயிற்சி முகாமில் எடுத்துக்கூறப்பட்டது.

  ஒன்றிய வருவாய் அலுவலர் ச.லோகநாதன், மாவட்ட இளையோர் பேரவைத் தலைவர் கே.சி.தியாகராஜன், தேசிய இளையோர் படை உறுப்பினர் கே.அருள்மணி, தொண்டு நிறுவன இயக்குநர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai