Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    By நாமக்கல்  |   Published on : 13th January 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில், சாலைப் பாதுகாப்பு வார விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாமக்கல் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடந்த கலை நிகழ்ச்சியை

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் கே.காளிமுத்து, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எஸ்.உதயகுமார், கே.எஸ்.துரைசாமி, எ.கருப்பண்ணன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai