Enable Javscript for better performance
தேசிய இளைஞர் தினப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஒ.செளதாபுரம் ஊராட்சிப் பகுதியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் தினப் பேரணி மற்றும் புஷ்பாஞ்சலி திங்கள்கிழமை நடைபெற்றது.

    கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்கம், ஒ. சௌதாபுரம் ஊராட்சி மன்றம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

    ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி முன் துவங்கிய விழிப்புணர்வுப் பேரணியை ஊராட்சித் தலைவர் எஸ்.ரஞ்சித் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

    பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய தட்டிகளை பேரணியில் ஏந்திச் சென்றனர். விவேகானந்தர் சிலைக்கு மங்கள ஆராதனை, தேவபாராயணத்தை வெண்ணந்தூர் தங்கவேல் நடத்தினார்.

    சௌதாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஆர்.முத்துசாமி, முன்னாள் மாணவர் சங்கத் துணைச் செயலர் கே.அருணாசலம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து புஷ்பாஞ்சலி செய்தனர்.

    சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள் அடங்கிய புத்தகம் மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு இலவசமாக

    விநியோகிக்கப்பட்டது. குருக்கப்புரம் ஸ்ரீபாரதி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் எஸ்.சதானந்தம், உறுதி மொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

    தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை, பேச்சு மற்றும் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai