சுடச்சுட

    

    பதவி உயர்வு: அரசுக்கு கிராம உதவியாளர்கள் நன்றி

    By நாமக்கல்  |   Published on : 13th January 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றிய கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதற்கு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநிலப் பொருளர் டி.பி.வீராசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தகுதியுள்ள கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் கிராம உதவியாளராகப் பணிபுரிந்தவர்களுக்கு காலிப் பணிடங்களில் 20 சதவீதம் என்ற அளவுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துறை அமைச்சர் அறிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, கடந்த 26-ஆம் தேதி அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையால் ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராம உதவியாளர்கள், ஒரு சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அதற்குக் காரணமான முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை முதன்மைச் செயலர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai