சுடச்சுட

  

  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்தி:

  நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி மற்றும் குவியல் முறையில் மண்புழு உரம் தயாரித்தல், பயிர்க் கழிவுகள், நகரக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கும் மண்புழு உரப் பரிந்துரை அளவு, மண்புழு உரத்தின் நன்மைகள், மண்புழு ஊட்ட நீர் தயார் செய்யும் முறை, அதனைப் பயிர்களுக்குத் தெளிக்கும் அளவு முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.

  பயிற்சியில் சேர விருப்பமுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ வரும்

  19-ஆம் தேதிக்குள் பெயரைக் கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai