சுடச்சுட

  

  மயானப் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு

  By நாமக்கல்,  |   Published on : 13th January 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயானப் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி அருகே மாம்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

  மாம்பாளையத்தில் சுமார் 65 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகள் விளை நிலங்களுக்கும், மயானத்திற்கும் சென்று வர பொதுப்பாதை உள்ளது. மாட்டு வண்டிகள் பயன்பாட்டிலிருந்த காரணத்தால் அப்பாதை கரடு, முரடாக உள்ளது. தற்சமயம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே தார்ச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவரிடம் மனுக் கொடுத்தோம். அதன்படி, பொதுப் பாதை அளவீடு செய்ய நில அளவையாளர் வந்த போது அதே ஊரைச் சேர்ந்த சிலர் அளவீடு செய்வதைத் தடுத்து நில அளவையாளரைத் திருப்பி அனுப்பினர். மேலும், கடந்த 10-ஆம் தேதி பொதுப்பாதையை அழித்து, ஜேசிபி, டிராக்டர் மூலம் மண்ணை அள்ளிச் சென்று விட்டனர்.

  எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மயானத்துக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்லும் பொதுப்பாதையில் தார்ச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai