சுடச்சுட

  

  "விளையாட்டு, சமூகப் பணிகளில்மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்'

  By நாமக்கல்,  |   Published on : 13th January 2015 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளில் மாணவர்கள் பங்கேற்க பள்ளிகள் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் கேட்டுக் கொண்டார்.

  நாமக்கல் நேசனல் பப்ளிக் பள்ளியின் 6-ஆம் ஆண்டு விளையாட்டு விழா, பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்த தின விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

  பள்ளித் தலைவர் கே.பி.சரவணன் தலைமை வகித்தார். முதல்வர் ராஜசுந்தரவேல் வரவேற்றார். மேல்நிலை வகுப்பு முதல்வர் (பொறுப்பு) சாந்தகுமார் முன்னிலை வகித்தார்.

  சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய 4 அணிகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியில் அதிகப் புள்ளிகளுடன் நீல நிற அணி முதலிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் பேசியது: அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மாணவர்களை அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களாக உருவாக்கப் பள்ளிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ள முடியும்.

  விளையாட்டு, சமூகப் பணிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களுக்கு சமுதாய சிந்தனை வளரும். மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்புகளைப் பள்ளிகள் உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்றார்.

  மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து இறைவனை வணங்கி பசு மாட்டிற்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் விவேகானந்தரின் வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் நாடகம் நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai