சுடச்சுட

  

  விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

  By நாமக்கல்,  |   Published on : 13th January 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாகி கிருஷ்ணவேணி குத்துவிளக்கு ஏற்றி கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் அர்த்தநாரீஸ்வரன், இயக்குநர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவர் கிருபாநிதி, நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம், சேர்க்கை அதிகாரி வரதராஜன், முதல்வர் குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  108 பெரிய பானைகளில் பொங்கலிட்டு சூரிய வழிபாடு செய்தனர். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவிகளுக்கு உறி அடித்தல், சட்டி உடைத்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி, ஊசி நூல் கோர்த்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

  பாரம்பரிய கிராமிய நடனங்களான ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், குச்சிப்புடி நடனம் உள்ளிட்ட 60 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முக்கியமாக ஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்வை தத்ரூபமாக மாணவிகள் கல்லூரி வாளாகத்தில் உள்ள வித்ய கணபதி கோயிலில் நடத்திக் காட்டினார். கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சுமார் 23,500 மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த பொங்கல் திருவிழாவில் 108 குழுக்களாக மாணவிகள் ஆங்காங்கே பொங்கல் வைத்துக் கொண்டாடியது திருவிழாப் போல இருந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai