சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By குமாரபாளையம்,  |   Published on : 14th January 2015 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் தொடங்கி சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரி்வு சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் முடிந்த இப்பேரணியை தலைமையாசிரியர் சுந்தரராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், கோஷமிட்டும் மாணவர்கள் சென்றனர்.

    நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் சிவாஜி, உடல்கல்வி ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai