சுடச்சுட

  

  ஜன.22-ல் வீரிய ஒட்டு ரக தர்பூசணி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

  By நாமக்கல்,  |   Published on : 14th January 2015 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வீரிய ஒட்டு ரக தர்பூசணி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

   நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிற்சி 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் பங்கேற்கலாம்.  

   பயிற்சியில் தர்பூசணியில் உள்ள உயர் ரகங்கள், நாற்றங்கால் மேலாண்மை, நடும் பருவம், நடவு முறைகள், பாலித்தீன் நிலப்போர்வை, சொட்டு நீர்ப்பாசனம், நீர்வழி உரமளித்தல், உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறைகள் மற்றும் பூச்சி நோய் நிர்வாக முறைகள் குறித்த  தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாகக் கற்றுத்தரப்படும்.                  

   விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266244, 266650 தொலைபேசி எண்கள் மூலமாகவோ 21ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai