Enable Javscript for better performance
தீவனத்தில் எரி சக்தியின் அளவை அதிகரிக்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தீவனத்தில் எரி சக்தியின் அளவை அதிகரிக்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 14th January 2015 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பனிக்காலத்தில் கோழிகளை பாதுகாக்க தீவனத்தில் எரி சக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும் என கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     இதுகுறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் பொதுவாக தெளிவாகவும். மழையற்றும் காணப்படும்.  இரவு வெப்பம் மிகக்குறைவாக இருக்கும்.  கோழிகளை பனியிலிருந்து பாதுகாப்பதற்கு உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்டுவது மட்டுமன்றி, தீவனத்தில் எரிசக்தியின் அளவையும் அதிகரிக்க வேண்டும், தீவன எடுப்பைப் பொறுத்து எரிசக்தியின் அளவை நிபுணர்களை கொண்டு முடிவு செய்யலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai