சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் ஆபரேஷன் ஸ்மைல் முகாம்

  By நாமக்கல்,  |   Published on : 14th January 2015 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் ஆபரேஷன் ஸ்மைல் என்ற காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் இம்மாத இறுதிவரை ஆபரேஷன் ஸ்மைல் என்ற பெயரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்க முடியாத குழந்தைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேடுதல் வேட்டை நடத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

   இக்குழுக்கள் பல்வேறு கூர்நோக்கு இல்லங்கள், அனாதை இல்லங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு அனாதையாக தாய், தந்தை பற்றி தெரியாத குழந்தைகள் தொடர்பான தகவல்களை புகைப்படத்துடன் சேகரித்து மாவட்டம், நகரம், மண்டலம் வாரியாக ஒப்பீடு செய்து குழந்தைகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

   ஆதரவற்ற குழந்தைகளை கண்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 16ஏ, கண்டர் பள்ளி சந்து, மோகனூர் சாலை, நாமக்கல்-1 என்ற முகவரிக்கோ, 04286 – 233103 என்ற தொலைபேசி எண், அல்லது குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்ணான 1098 சைல்டு லைனிற்கோ, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பெண்களுக்கான இலவச உதவி தொலைபேசி எண் 1091க்கு தகவல் தெரிவிக்கலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai