சுடச்சுட

  

  நாமக்கல்லில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடந்தது.

  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் சார்பில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, ஆட்சியர் அலுவலகம் முன் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட தலைக் கவசம் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

  இந்த வாகனப் பேரணி நல்லிபாளையம், சேலம் சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று திருச்சி சாலையை அடைந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் துரைசாமி, கருப்பண்ணன், உதயகுமார், போக்குவரத்து ஆய்வாளர் பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai