சுடச்சுட

    

    குழந்தைகளின் கற்பனைத் திறனை தூண்டுபவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும்

    By நாமக்கல்,  |   Published on : 15th January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைளின் கற்பனைத் திறனைத் தூண்டுபவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும் என்றார் பட்டிமன்றப் பேச்சாளரும், திரைப்பட நடிகருமான கு.ஞானசம்பந்தன்.

    திருச்செங்கோடு எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளின் ஆண்டு விழா தாளாளர் பி.செங்கோடன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. எஸ்.பி.கே. குழும நிறுவனங்களின் தலைவர் ஏ.எஸ்.பிரபு, எஸ்.பி.கே. கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஏ.எஸ்.அங்கம்மாள், பி.சிந்து முன்னிலை வகித்தனர்.

    எஸ்.பி.கே.கிட்ஸ் பள்ளியின் துணை முதல்வர் எஸ்.கே.சுகுமாரன், மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.தனபால், சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் பி.தாமோதரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.

    2013-14-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 100 சத மதிப்பெண்கள் பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் திரைப்பட நடிகர் கு.ஞானசம்பந்தன் பேசியது: பெற்றோர்கள் இன்றைய வேகமான உலக வாழ்வில் தம் குழந்தைகளோடு பேசுவதில்லை. அவரவர் பல வேலைகளைச் செய்தாக வேண்டிய கட்டாய வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    அதனால்தான் குழந்தைகள், தம்மோடு யாரும் பேசாததால், கார்ட்டூன்கள், போகோ, சோட்டாபீம் என்று தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளை விரும்பிப் பார்க்கின்றனர். ஏனெனில் நாய்க்குட்டி, கிளி, பூனை, எலி, குரங்கு எனப் பேசாத பொருளெல்லாம் பேசுகின்றன.

    இதனால், தங்களுக்கென கற்பனைத் திறன்களைக் கொண்டுள்ள குழந்தைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் கற்பனைத் திறன்கள் தூண்டப்பட்டு நன்கு வளர்ச்சி அடையும்.

    பெற்றோர் தம் குழந்தைகளின் கற்பனை என்ன, அவர்களின் ஆசைகள் என்ன என்று குழந்தைகளுடன் கலந்து பேசவேண்டும். பெற்றோரே ஒரு குறிப்பிட்ட கல்வியை மட்டுமே வேண்டுமென்று குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai