Enable Javscript for better performance
சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவு

    By நாமக்கல்  |   Published on : 15th January 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 2013-ஆம் ஆண்டில் மொத்தம் 98 பெரும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 78 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிப்பு சதம் 80. ஆனால் கடந்த ஆண்டில் மொத்தம் 42 பெரும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 39 வழக்குகள் கண்டுபிடிக்கபட்டன. கண்டுபிடிப்பு சதவீதம் 93.

    ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைப் பொறுத்தவரையில் 2013-ஆம் ஆண்டில் மொத்தம் 318 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 252 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிப்பு சத 79. கடந்த ஆண்டில் மொத்தம் 230 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 217 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிப்பு சதம் 94.40.

    2013-ஆம் ஆண்டில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 23 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை விபத்து இறப்பு வழக்குகளைப் பொறுத்தவரையில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 438 வழக்குகள் பதிவாகின. அது கடந்த ஆண்டு 418 வழக்குகளாகக் குறைந்துள்ளது.

    மோட்டார் வாகன சிறு வழக்குகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் மொத்தம் 61 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கு அபராதத் தொகையாக ரூ.60 லட்சத்து 78 ஆயிரத்து 711 வசூலிக்கப்பட்டது.

    இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகப் பதிவு செய்யப்பட்ட 3799 வழக்குகளும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக பதிவு செய்யப்பட்ட 282 வழக்குகளும் அடங்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai