சுடச்சுட

    

    இந்து சமய அறநிலையத்துறையின் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் பாவை விழா திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் அண்மையில் நடந்தது.

    சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் இணை ஆணையர் சூரியநாராயணன் வரவேற்றார்.

    தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, எம்பி பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே நடத்தப்பட்ட திருப்பாவை, திருவெம்பாவை, பாடல்களை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளை வென்ற 33 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்களை வழங்கினர்.

    ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வட்டூர் கணக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2-ஆம் வகுப்பு மாணவி நவீனா முதல் பரிசு பெற்றார். 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போட்டியில் 2-ஆம் வகுப்பு மாணவி முதல் பரிசு பெற்றதை அமைச்சர் பாராட்டினார்.

    விழாவில், நாமக்கல் உதவி ஆணையர் கிருஷ்ணன், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன்.சரஸ்வதி, டி.சி.எம்.எஸ். தலைவர் கந்தசாமி, கூட்டுறவாளர் மனோகரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai