நகராட்சிப் பள்ளியில்பொங்கல் விழா
By ராசிபுரம் | Published on : 15th January 2015 03:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராசிபுரம் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், பொங்கல் விழா ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கு.பாரதி வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரவதனா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர்
சந்திரசேகர், பொங்கல் திருநாள் குறித்துப் பேசினார்.
பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து, பூஜை செய்து, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசவி மகிளா விபாக் சங்கம் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.
ராகவேந்திரா தொழில் பயிற்சி கல்லூரித் தாளாளர் ரவி, ரோட்டரி சங்கச் செயலர் தருண்குமார், நிர்வாகிகள் அசோக்குமார், ரவி, ரவிக்குமார், வி.ராஜூ, கார்த்தி, மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வித்யா நிகேதன் பள்ளியிலும், ராசிபுரம் வெற்றி விகாஸ் சிபிஎஸ்இ பள்ளியிலும் பாரம்பரிய முறையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பொங்கல் விழா நடத்தப்பட்டன.