Enable Javscript for better performance
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதும் 31 ஆயிரம் பேர்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதும் 31 ஆயிரம் பேர்

    By நாமக்கல்,  |   Published on : 15th January 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 31 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 80 மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்து

    வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 187 பள்ளிகளில் இருந்து 31 ஆயிரத்து 18 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 80 மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 527 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இவர்களில் 30 ஆயிரத்து 453 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதம் 96.59.

    மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டில் 4-ஆவது இடத்தில் இருந்தது. அது கடந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி, 2-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு முதல் இடத்தைப் பிடிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai