சுடச்சுட

  

  பரமத்திவேலூர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.2500

  By பரமத்திவேலூர்  |   Published on : 15th January 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மல்லிகை கிலோ ரூ.2500-க்கு ஏலம் போனது.

  பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளில் குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் பரமத்திவேலூரில் நடைபெறும் தினசரிச் சந்தையில் ஏலம் விடப்படுகின்றன.

  கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1000, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.110, கோழிக்கொண்டை கட்டு ஒன்று ரூ.20, செவ்வந்தி ரூ.80, பெங்களூரு மல்லி ரூ.300, ரோஜா ரூ.120, துளசி கட்டு ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

  புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2500, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.300, கோழிக்கொண்டை கட்டு ஒன்று ரூ.25, செவ்வந்தி ரூ.400, பெங்களூரு மல்லி ரூ.900, ரோஜா ரூ.150, துளசி கட்டு ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai