சுடச்சுட

  

  ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 36-ஆவது ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

  பள்ளித் தலைவர் எஸ்.கே.ஏ. முருகேசன் தலைமை வகித்தார். செயலர் என்.மாணிக்கம் வரவேற்றார். முதல்வர் சி.சுமதி ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளைச் செயலர் ஆர்.பெத்தண்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

  நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் பேசியது: மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் செயல்பட வேண்டும். வீழ்ச்சியடைந்தாலும் மீண்டும் முயற்சி செய்து எழுச்சியடையவேணடும். மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க வேண்டும். வருங்கால சமுதாயத் தலைவர்களான மாணவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்தி நாட்டின் நல்ல தலைவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை என்றார்.

  கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

  பள்ளிப் பொருளர் வி.சுந்தரராஜன், துணைத்தலைவர் எஸ்.சந்திரசேகர், துணைச் செயலர் வி.ராமதாஸ், இயக்குநர்கள் வி.பாலகிருஷ்ணன், சி.நடராஜ், எம்.நாகமாணிக்கம், டாக்டர்கள் ஆர்.ராமகிருஷ்ணன், ஆர்.எம்.கிருஷ்ணன், ஆடிட்டர் வி.சி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் டி.எஸ்.பி. வி.ராஜு, நாமக்கல் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சி.சந்தானம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai