சுடச்சுட

    

    பி.எஸ்.என்.எல்.சிம் கார்டு தட்டுப்பாடு: ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

    By ராசிபுரம்  |   Published on : 15th January 2015 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சிம்கார்டு தட்டுப்பாட்டை நீக்கித் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவித் தலைவர் என்.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் மற்றும் டாப் அப் கார்டுகளுக்குக் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தவும், சிம்கார்டுகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai