சுடச்சுட

    

    பொங்கல் பொருள்களை வாங்கக் குவிந்த பொதுமக்கள்

    By நாமக்கல்  |   Published on : 15th January 2015 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நாமக்கல் கடை வீதிகளில் பொருள்கள் வாங்குவதற்காக கிராம மக்கள் திரளாகக் குவிந்தனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் நகரில் ஜவுளிக் கடை, மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. பொங்கல் விற்பனைக்காக மேற்கண்ட பகுதிகளில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் குவிந்தனர்.

    சிறுவர் முதல் பெரியவர் வரையிலான ஜவுளிகள், போர்வை, துண்டு, பாய், பொங்கல் பாத்திரங்கள், மண் பாண்டங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன.

    பிரபல துணிக் கடைகளிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதால், நாமக்கல் உழவர் சந்தை, மார்க்கெட் சாலை, சேந்தமங்கலம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பொங்கல் பானை, செங்கரும்புக் கட்டு, வாழைப் பழத்தார், மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து ஆகியனவும் குவிக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு முதல் நாளான புதன்கிழமை காலை முதலே கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்து உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக இருந்தது. இதுபோல் ஜவுளிக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், உழவர் சந்தை, சேந்தமங்கலம் சாலைப் பகுதிகளில் காவல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருட்டு, ஜேப்படி திருடர்களைக் கண்காணிப்பதற்கு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டை விட ஒரு கரும்புக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. பொங்கல் சீர் வரிசை பொருள்களான பித்தளைப் பானைகள் மற்றும் பொங்கல் வைப்பதற்கான மண் பானைகளின் விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பொங்கல் பொருள்களை வாங்க வந்த மக்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai