சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By நாமக்கல்  |   Published on : 15th January 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ளத் தேவையான தொழில்பயிற்சிக் கட்டணம், போட்டித் தேர்வுக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்த உதவும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெற 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதோர், பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோர், தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவைத் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்கவேண்டும்.

    பட்டியலின வகுப்பைச் சேர்ந்தோர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    இத்தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து தாக்கல் செய்ய வேண்டும்.

    ஏற்கனவே, உதவித் தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து ஓராண்டு முடிவுற்றவர்கள் மீண்டும் சுய உறுதிமொழி ஆவணம் உரிய இணைப்புகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    சுய உறுதிமொழி ஆவணம் அளித்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை 12 காலாண்டுகள் மட்டும் வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai