சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் 2 நாள்களில் 4,075 மூட்டை அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த விலையான ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190-க்கு வழங்கும் அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சிமென்ட் விற்பனை செய்ய எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோகனூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு விற்பனைக் கிடங்குகள் உள்ளன.

  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் நாமக்கல், ராசிபுரம், பரமத்தி மற்றும் திருச்செங்கோடு முதல் மற்றும் இரண்டாவது சிமென்ட் கிடங்குகள் ஆகிய 5 இடங்களிலும் என மொத்தம் 16 கிடங்குகளில் ஒரு மூட்டை ரூ.190க்கு அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12}ஆம் தேதி விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இரண்டு நாள்களில் 4,075 மூட்டை (203.75 மெட்ரிக்டன்) அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai