சுடச்சுட

  

  நாமக்கல் பிஜிபி கல்விக் குழுமங்களின் நிறுவனர் பழனி பெரியசாமியின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

  வேட்டாம்பாடி பிஜிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சென்னையைச் சேர்ந்த மாற்றம் அறக்கட்டளை சார்பில், நாமக்கல் அருகே கொசவம்பட்டி கவரா நகர் சுயராஜ்ஜிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு பிஜிபி பள்ளிகளின் தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார்.

  தன்மை அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் பிரதீப்குமார் வரவேற்றார். முகாமில், கண் பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும், இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

  இந்தக் கல்வி நிறுவனக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 25 பேர் ரத்த தானம் வழங்கினர். பிஜிபி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பிரபாகர், அருணாச்சலம், ஷீலாவதி, செய்தி தொடர்பாளர் பிரணவ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai