சுடச்சுட

  

  கழிவுநீர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி ஊராட்சி,

  ஜேடர்பாளையம் 4ஆவது வார்டு பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அண்மையில் அளித்த மனு விவரம்: ஜேடர்பாளையம் 4ஆவது வார்டு பகுதியில் பெரிய கழிவுநீர்க் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் இப்போது சேதமடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் பிரதான சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், பலவித நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai