Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, கீரம்பூரில் விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

    கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பேரணியை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தொடக்கிவைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் கீரம்பூர் வீதிகளில் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டப்படி ஊர்வலமாகச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜா என்ற செல்வக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல், கிராம நிர்வாக அலுவலர் பக்ருதீன் முகமது கீரம்பூர் ஊராட்சித் தலைவர் கோபி, துணைத் தலைவர் சேதுபதி, கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai