Enable Javscript for better performance
ஜேடர்பாளையம் படுகையணையில் குளிக்கத் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஜேடர்பாளையம் படுகையணையில் குளிக்கத் தடை

    By பரமத்திவேலூர்  |   Published on : 17th January 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் உள்ள படுகையணை, ராஜா வாய்க்காலில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில்

    ஜேடர்பாளையம் படுகையணைப் பகுதி ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்தப் பகுதிக்கு நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாள்களில் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை ருசிப்பதற்காக வருவோரின் எண்ணிகையும் அதிகம்.

    இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, படுகையணை, பூங்காவுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர்.

    இந்த நிலையில், படுகையணையில் குளிப்பதற்கு பொதுப் பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், படுகையணையில் இருந்து பிரிந்து செல்லும் ராஜா வாய்க்காலில் குளிப்பதற்கென பாதுகாப்பாக கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால், சுற்றுலா வரும் பொதுமக்கள் படுகையணை பகுதியிலும், ராஜா வாய்க்காலிலும் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியை மீறி குளிப்பதால் தண்ணீரின் வேகம் தெரியாமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், காவல் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் அந்தப் பகுதியில் பல இடங்களில் மது அருந்துவதற்கும், குளிப்பதற்கும் தடை விதித்துள்ளனர்.

    இந்தத் தடையை மீறி குளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai