Enable Javscript for better performance
திமுக சார்பில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில், பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.ஜெகந்நாதன் தலைமையில், கூனவேலம்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதில், ஊராட்சி செயலர் மா.சரவணன் முன்னிலை வகித்தார். பின்னர், பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.

    பின்னர், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். ஆர்.கொமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளையும் தொடக்கிவைத்தனர். இதில், ஒன்றிய துணைச் செயலர் சிவா, ஒன்றியப் பொருளாளர் ரவி, மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன், இலக்கிய அணி செயலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai