சுடச்சுட

  

  திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டுப் போட்டி

  By நாமக்கல்  |   Published on : 17th January 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கண்களை கட்டிக் கொண்டு கோழியைப் பிடிக்கும் புதுமையான போட்டிக்கு நவீன ஜல்லிக்கட்டு என்று பெயரிட்டுள்ளனர்.

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடைபெற்ற கோழிப் பிடிக்கும் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  இந்தப் புதுமையான போட்டி, திருச்செங்கோடு நந்தவனத் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு வட்டத்தின் நடுவில் போட்டியாளர் கண்ணை கட்டி நிறுத்தப்படுவார்.

  போட்டியாளரின் காலில் கயிறு கட்டப்படும். கயிற்றின் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும், போட்டியாளர் வட்டத்தை விட்டு வெளியேறாமல், கயிற்றைப் பிடித்து இழுக்காமல் கோழியைப் பிடிக்க வேண்டும்.

  இந்த நிபந்தனைகளின்படி கோழியைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  வீரத்துக்கான போட்டியாக ஜல்லிக்கட்டு கருதப்படும் நிலையில், நவீன ஜல்லிக்கட்டு விவேகத்துக்கானப் போட்டியாக உள்ளது. இந்தப் போட்டியில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பங்கேற்கின்றனர். எந்த அச்சமும் இன்றி இந்த விளையாட்டை விளையாட முடியும் என்றார் போட்டி ஏற்பாட்டாளர் தேவேந்திரன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai