Enable Javscript for better performance
நல்லிபாளையத்தில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    நல்லிபாளையம் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

    தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், விழாவில் பங்கேற்ற ஆண்கள் வேஷ்டி அணிந்து வந்தனர்.

    தொடர்ந்து, தமிழர் திருநாளை முன்னிட்டு, பொங்கல் வைத்து வழங்கப்பட்டது. மேலும், சிலம்பம், கரகம், காவடி போன்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    நம்பிக்கை இல்லத்தில் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அய்யம்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர் கதிர்செல்வன், தமிழ் மீட்சி இயக்க நிர்வாகி அன்வர் சாஜி, அறங்காவலர்கள் தியாகராஜன், ஏசிடி புரமோட்டார்ஸ் நிர்வாகி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai