Enable Javscript for better performance
பரமத்திவேலூர் அருகே பைக் மோதியதில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்திவேலூர் அருகே பைக் மோதியதில் முதியவர் சாவு

    By பரமத்தி வேலூர்  |   Published on : 17th January 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி (எ) கிருஷ்ணன் (75). இவர் வெள்ளிக்கிழமை காலை வேலூரில் இருந்து குப்புச்சிபாளையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மணி மீது மோதியது. இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகனான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai